திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தண்டுறை, 38-வது வார்டு முல்லை நகர், ரோஜா நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளது. இதில் சாலை அருகில் உள்ள 5 மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.