அபாய நிலையில் மின்கம்பம்

Update: 2024-12-22 10:28 GMT
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் ஆவுடையார்பட்டினம் செல்லும் சாலையில் பொன்னகரம் ஆர்ச் எதிரே உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்