பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரவிளையில் ஆலஞ்சி கால்வாய் பாய்கிறது. கால்வாயில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இரவு, பகல் நேரங்களிலும் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந்த இடத்தில் கால்வாய்யையொட்டி சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவுநேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கால்வாயில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மின்விளக்கு இல்லாததால் சமூக விரோத சம்பவங்களும் அங்கு நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி அங்கு தெருவிளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சோபனராஜ்,பாலப்பள்ளம்.