மேல்மலையனூர் அருகே ஈயக்குணம் அம்பேத்கர் நகரில் உள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.