ஒட்டன்சத்திரம் தாலுகா புதுச்சத்திரத்தில் இருந்து கம்பளிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பிகள் அறுந்து அருகே உள்ள வயல்வெளியில் விழுந்து கிடக்கிறது. பல மாதங்கள் ஆகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகளை உடனே சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.