சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட அசோகபுரம் சரவணா கார்டனில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்தப்பகுதி மிகவும் இருட்டாக உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பகுதியில் இரவில் விஷ ஜந்துகள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே சரவணா கார்டனில் தெருவிளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.