தெருவிளக்குகள் ஒளிருமா?
திருப்பூர் 25-வது வார்டு அணைப்பாளையம் பகுதியில் தெருவிளக்கு எரியாததால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது பிரதான சாலையான மங்கலம் சாலை காலேஜ் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இங்கே நொய்யல் ஆற்றங்கரையை கடக்கும் பாலமும் அமைந்துள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து ஒளிர செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், திருப்பூர்.