பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் ஆலத்தூர் கேட்டில் இருந்து காரை செல்லும் சாலையோரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியும்போது, போதிய வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.