தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் திருப்பாவைதுறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேல்குடியான தெருவில் இருக்கும் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இது எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.