மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடுமோ? என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.