பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்துரு, பா்கூர்.