சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-11-10 17:18 GMT

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் வட்டாரம், தென்கரைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வடகரை காலனி சுடுகாடு அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரியும் படியும் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் காற்று வீசும்போது, எந்நேரத்திலும் மின்கம்பம் முறிந்து, சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வண்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்