ஈரோடு மாநகராட்சி மாமரத்துப்பாளையம் பாலாஜி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் கிட்டத்தட்ட 10 தெருவிளக்குகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை எரியாததால் இரவு நேரத்தில் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், கடைகளுக்கு சென்று வருவதற்கும் அச்சப்படுகின்றனர். எனவே தெரு விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?