புதுக்கோட்டை ஒன்றியம், கணபதிபுரம் ஆதிதிராவிடர் காலனியில் கந்தர்வகோட்டை செல்லும் சாலை அருகே மூன்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு கடந்த 6 மாதத்திற்கு மேலாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதாலும், அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள உயர்மின் கோபுர விளக்கை எரியவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.