எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2024-10-27 11:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தில் சாலை ஓரத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்