எரியாத மின்விளக்கு

Update: 2024-10-20 18:34 GMT

சேலம் மேயர் நகர் 7-வது தெருவில் குப்பை தொட்டி அருகே மின்கம்பம் உள்ளது. இதில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் இருந்து விஷபூச்சிகள் வெளியே வருகின்றன. பொதுமக்கள் இரவில் வெளியே செல்லும்போது அவர்களை கடிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எரியாமல் உள்ள மின்விளக்ைக சரி செய்யலாமே!

-ராஜா, மேயர்நகர்.

மேலும் செய்திகள்