பெருமாநல்லூர் அருகே சொக்கனூர் ஊராட்சி ஆதி திராவிடர் காலனி முதல் குமாரபாளையம் வரை கோனாபுரம் செல்லும் சாலையில் மின்கம்பங்களில் முட்செடிகள், கொடிகள் சூழ்ந்துள்ளது. அதை அடுத்துள்ள இடதுபக்கம் ஒரு மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது. இதனால் கனரக வாகனம் அந்த வழியில் சென்றால் மின் கம்பி உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த மின் கம்பத்தில் மின் விளக்கும் பழுதாகி நீண்ட நாட்களாக எரிவதில்லை. எனவே இவற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.