எரியாத மின்விளக்கு

Update: 2024-10-20 18:08 GMT

மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளி சந்தை சாலையில் கடந்த 6 மாதங்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிைய கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படு்கின்றனர். இந்த பகுதியில் சாலையோரம் புதர் மண்டி கிடப்பதால் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. குழந்தைகள் நடமாடும் பகுதி என்பதால் இரவு நேரங்களில் மின்விளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கார்த்திக், சிக்கமாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்