தேன்கனிக்கோட்டை அருகே பெட்ட முகிலாலம் ஊராட்சியில் குல்லட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்குகின்றது. மேலும் சிெமண்டு பூச்சு பெயர்ந்து மின்கம்பம் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மின்கம்பம் அருகே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்முருகன், தேன்கனிக்கோட்டை.