காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதி-பெருமாள் கோவில் வீதி சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். உயர் கோபுர மின்விளக்கு ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?