காவேரிப்பட்டணம் ஒன்றியம், கால்வேஅள்ளி ஊராட்சியில் உள்ளது கத்தேரி. இந்த பகுதியில் ஏரிக்கரை ஓரமாக மின்கம்பி ஆபத்தான நிலையில் செல்கிறது. அந்த வழியாக வரும் பொதுமக்கள் மீது திடீரென காற்று அடித்தால் மின்கம்பி விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் உயிர் இழக்கவும் நேரிடும் எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், கால்வேஅள்ளி.