மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் சந்தைப்பேட்டை விநாயகர் கோவில் பின்புறம் மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. செடி, கொடிகள் மின்கம்பத்தில் படர்ந்து இருப்பதால் சில நேரங்களில் அந்த பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கம்பத்தில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-அசோக், பாலப்பட்டி.