மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

Update: 2024-09-22 17:16 GMT

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை உள்பட பல முக்கிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களால் ஆன கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகர எல்லைக்குள் போதிய மின் விளக்குகள் இன்றி பல பகுதிகள் வெளிச்சமின்றி உள்ளது. இத்தகைய சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவர்களை அகற்றி, கற்களால் தடுப்பு கட்டி நகரை அழகுப்படுத்தும் வகையில் இரு சாலைகளுக்கும் மின் விளக்குகள் பொருத்தினால் நகர் அழகுற காட்சி அளிக்கும். இதற்கான திட்டத்தை நகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து விரைந்து செய்திட வேண்டும்.

-பிரேம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்