தாரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் நெடுஞ்சாலையோரம் நடைபாதையில் உள்ளது. இதன் அருகில் அரசு உதவிபெறும் பள்ளியும் உள்ளது. பள்ளிக்கு வரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அப்பகுதியை கடந்து செல்கிறார்கள். மழைக்காலங்களில் டிரான்ஸ்பார்மரை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே அந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி நீர் தேங்காத வகையில் கான்கிரீட் தளத்தை உயர்த்தி அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாகும்.
-சசிகுமார், தாரமங்கலம்.