சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சண்முகராஜா தெரு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடைவதுடன், இல்லத்தரசிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.