நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் செக்காரத் தெரு உள்ளது. இங்குள்ள ஒரு மின் கம்பத்தில் சுமார் 3 அடி உயரத்தில் குழந்தைகள் தொடும் வகையில் மிகவும் ஆபத்தான முறையில் மின் மீட்டர் சுவிட்ச் மற்றும் மின் இணைப்பு ஒயர்கள் வெளியே தெரியும் படி இரும்பு மின் பெட்டி திறந்த படி உள்ளது. எனவே அபாய நிலையில் சாலையோரம் உள்ள இந்த மின் பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-சுகேல், கந்தம்பாளையம்.