கொல்லிமலையில் உள்ள சோளக்காடு பஸ் நிறுத்தம் எதிரே சற்று உயரமான பகுதியில் சாய்ந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இப்பகுதி பிரதான சாலை என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சாய்ந்த மின்கம்பத்தை மாற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜன், சோளக்காடு.