பெண்ணாடம் அடுத்த பொன்னேரி மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் அங்கு வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.