தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பள்ளிகூடத்தான் காலனியில் சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தப்படவில்லை. தற்போது இந்த பகுதியில் வீடுகள் அதிகரித்துள்ள நிலையில் போதுமான மின் அழுத்தம் இல்லை. இதனால் இந்த பகுதி வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலுசிவா, பாலக்கோடு.