டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-06-16 17:42 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த புனல்வாசல் கிராமத்தின் கிழக்கு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பயனற்று கிடக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அந்த பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், தலைவாசல்.

மேலும் செய்திகள்