காஞ்சீபுரம் மாவட்டம், தில்லை கங்கை நகர் 39-வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்பவர்கள் தங்கள் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக மின்வாரியதுறை அதிகாரிகள் புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.