அபாய நிலையில் மின்கம்பிகள்

Update: 2024-06-09 16:19 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியில் இருந்து சென்னை, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் மிகவும் தாழ்வான நிலையில் மின் கம்பிகள் உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பகுதி உரசும் வகையில் மின்கம்பிகள் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே தாமதமின்றி மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜமுத்து, பர்கூர்.

மேலும் செய்திகள்