சேலம் மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் பெருமாள் கோவில் முதல் பம்பைகாரர் வட்டம் செல்லும் வழியில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி வழியாக இரவு நேரம் வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனிவேல், புளியம்பட்டி.