பகலில் எரியும் தெருவிளக்குகள்
திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஷ்வரா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெரு விளக்குகள் பகல் 12 மணி வரை எரிகிறது. மாலை 6 மணிக்கு விளக்குகள் எரிவதில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடக்க ஏதுவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து சரியான நேரத்தில் விளக்கு எரியவும், அணையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.
-குமார், திருப்பூர்.