புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டானி பிரசக் குடி கிராமத்தை சேர்ந்த கோபாலபட்டினம் கிராமத்தில் சுமார் 6,000 பேர் வசிக்கிறார்கள். இப்பகுதியில் குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் அதிகமாக நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் கடலுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.