தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மூலபெள்ளூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப் பகுதியில் சிமெண்டு சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் டிராக்டர், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த மின்கம்பத்தின் கீழ் பகுதி உடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், ஏரியூர்.