கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம், சென்னை, புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடமாக ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், மேல் பகுதிகளில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் உடனடியாக மின்விளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, கிருஷ்ணகிரி.