ஆபத்தான மின்கம்பம்
கொல்லங்கோடு நகராட்சி 2-வது வார்டு பின்குளத்திலிருந்து பாத்திமாபுரம் செல்லும் சாலையில் பெருங்குடி பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் நடுவில் இரண்டாக உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலெக்சாண்டர்,
பாத்திமாபுரம்.
=====