எரியாத மின்விளக்குகள்

Update: 2024-02-11 16:39 GMT

பர்கூர் அடுத்த அம்மெரி அருகே கிருஷ்ணகிரி- சென்னை புறவழிச் சாலையின் உயர்மட்ட மேம்பாலத்தின் உட்புறத்தில் உள்ள சாலையில் காரகுப்பம், கொள்ளப்பள்ளி, பசவண்ண கோவில் வழியாக கிருஷ்ணகிரிக்கும், ஆந்திர மாநிலம் குப்பத்திற்கும் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தின் உட்புறத்தில் உள்ள விளக்குகள் ஒரு வருடத்திற்கு மேலாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருண்டு கிடக்கிறது. அடிக்கடி விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் நடக்கிறது. இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும், அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனும் சென்று வருகின்றனர். இந்த மேம்பாலத்தினுள் உள்ள மின் விளக்குகளை விரைவில் சரி செய்து தர வேண்டும்.

-கோபி, பர்கூர்.

மேலும் செய்திகள்