ஆபத்தான மின்மாற்றி

Update: 2024-01-07 16:25 GMT

ஆபத்தான மின்மாற்றி

திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியபாளையம் பிரிவு, வள்ளியம்மை நகர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது கம்பம் உடைந்து விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் மக்கள் கடந்து செல்கின்றனர். இது குறித்து மண்டல அலுவலகத்திலும், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மின்கம்பம் எப்போது வேண்டுமானால் உடைந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள சேதமடைந்த கான்கிரீட் மின்கம்பங்களை மாற்றி விபத்துக்கள் ஏற்படும் முன் உரிய முறையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்பிரமணியம்,ராக்கியாபாளையம்.

9841765431

மேலும் செய்திகள்