சேதமடைந்த சுவிட்சு பெட்டி

Update: 2023-12-31 08:57 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் பழைய பள்ளித் தெரு வளைவின் முன்பு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் தெருவிளக்குகளுக்கான சுவிட்சு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவிட்சு பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகள் அதன் மீது கை வவைத்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுவிட்சு பெட்டியை மாற்றிவிட்டு புதிய பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்