ஈரோடு கனிராவுத்தர்குளம்-எல்லப்பாளையம் ரோட்டில் உள்ள வசந்த் நகர் 3-வது வீதி வழியாக செல்லும் மின்ஒயர் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் பட்டு தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே மின்ஒயரை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.