கொடுமுடி ஒன்றியம் எழுநூத்திமங்களம் ஊராட்சிக்குட்பட்டது குப்பம்பாளையம். இங்குள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள தெருவிளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக நடந்து செல்ல சிறுவர்-சிறுமிகள், பெண்கள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கை எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.