மின்கம்பத்தை கண்டுபிடியுங்கள்

Update: 2023-11-26 17:54 GMT
கடலூர் ஊராட்சி ஒன்றியம் எம்.பி. அகரம் ஊராட்சி பழைய காலனி பகுதியில் உள்ள மின்கம்பத்தை சூழ்ந்து செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மின்கம்பம் இருப்பதே தெரியவில்லை. மேலும் இதன் காரணமாக மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்