மின்விளக்கு பொருத்தப்படுமா?

Update: 2023-11-26 17:18 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி வேட்டைக்காரன் புதூர் கரட்டு காட்டில் உள்ள மின் விளக்கு இல்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-மணிகண்டன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்