கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சவுடாம்பிகை நகரில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. இதனை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் அமைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே சேதமடைந்த கம்பத்தை தாங்கி நிற்கும் வகையில் கூடுதலாக 2 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்கம்பங்களிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் அதன் அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.