கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள தெருமின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.