நாகை மாவட்டம் காடம்பாடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் உறுதித்தன்மையை இழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.