தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் கிராமத்தில் 4 சாலைகள் சந்திக்கும் பகுதியில் புதிய பஸ் நிழற்கூடம் கட்டப்பட்டு, அண்மையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிழற்கூடம் முன்பு பயணிகளுக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போது பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், முதியோர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே இடையூறாக நிழற்கூடம் முன்புள்ள மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.