கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்துள்ள மஜீத்கொல்லஅள்ளியில் இருந்து ஐகுந்தம் கொத்தப்பள்ளி வரை செல்லும் வழியில் சாலையோரம், விவசாய நிலங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் மழை காலங்களில் காற்று வேகமாக வீசும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், கிருஷ்ணகிரி.